search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி மரணம்"

    புதுவண்ணாரப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ். பெயிண்டர். இவரது மனைவி ராதிகா. இவர் களது 3 வயது மகள் மூனேஷி. நேற்று மாலை ராதிகா வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமி மூனேஷி சமையல் அறைக்குள் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் உள்ள நீரை எடுக்க முயன்றாள். அப்போது தலைகுப்புற தண்ணீருக்குள் விழுந்து விட்டாள்.

    மகளை காணாததால் ராதிகா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறுமியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுமி மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்களது மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½). பிரபாகரன் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.

    எனவே சஜிதா பிரபாகரன் வேலை பார்த்த சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை 7 மணி முதல் தனது இளைய மகள் ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் எம்.கைகாட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் வேலை பார்க்கும் பங்களா ஆகிய பகுதிகளில் சிறுமியை தேடினர். அப்போது சிறுமி பங்களா அருகில் உள்ள 8 அடி ஆழமுள்ள தொட்டியில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து குன்னூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தொட்டியில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டது. மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த படுகொலை சம்பவத்தில் சிறுமியின் தாய் சஜிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் குன்னூர் போலீசார் நேற்று இரவு முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டில் 4 நாட்களாக மகள் பிணத்துடன் வசித்து வந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் குமாரசாமி நகர் குறுக்குத்தெரு முதல் தெருவை சேர்ந்தவர் ராஜா மணி (எ) கணேசன். இவரது மனைவி பத்மாவதி. இவருக்கு சபீதா (21) என்ற மகள் உள்ளார். ராஜாமணி இறந்து விட்டார். இதனால் பத்மாவதி தனது மகளுடன் வசித்து வந்தார். சபீதாவுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபீதா இறந்துவிட்டார். இறந்த சபீதா உடலை அடக்கம் செய்யாமல் அவரது தாய் பத்மாவதி உடல் அருகேயே இருந்துள்ளார். 4 நாட்களாக அந்த உடலை வீட்டிலேயே வைத்து அன்றாட வேலையை கவனித்து வந்தாராம். இதனிடையே இன்று காலை அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

    சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பத்மாவதியின் வீட்டை பார்த்தபோது அங்கு அழுகும் நிலையில் சபீதா உடல் கிடப்பதையும், பத்மாவதி அங்குள்ள ஒரு மூலையில் அமர்ந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சபீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில் பத்மாவதி மனநலம் பாதித்தவர் என்றும், மகள் இறந்ததை அறியாமல் அவர் மகள் உடலுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. சபீதா உடல் நல குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் முள்ளக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    திருப்பூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் சிறுமியை தண்ணீரில் அமுக்கி தாயே கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    திருப்பூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி தமிழ் இசக்கி (21). இவர்களது 2½ வயது பெண் குழந்தை சிவன்யா ஸ்ரீ.

    இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது இவரது மகள் வீட்டின் பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் சிவன்யா ஸ்ரீயை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுமியின் தாய் தமிழ் இசக்கி முன்னுக்கு பின் முரணாக பேசினார். தான் வீட்டில் இருந்த போது சில மர்மநபர்கள் வந்து தாக்கியதாகவும், இதில் தான் மயங்கி விட்டதால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

    இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் நாகராஜின் தாயார் தனலட்சுமி தனது பேத்தியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் மருமகள் தமிழ் இசக்கி மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து போலீசார் தமிழ் இசக்கியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.போலீசாரிடம் தமிழ் இசக்கி கூறியதாவது-

    எனது கணவர் நாகராஜூக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனை மாமியார் தான் தீர்த்து வைத்து வந்தார்.

    இந்த நிலையில் கணவர் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தகராறு வலுத்தது. எனவே குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொள்ள திட்டம் தீட்டினேன். அதன் படி குழந்தைகயை பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். தமிழ் இசக்கியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    தேவாரத்தில் சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவரது உடல் இன்று தோண்டி எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள தேவாரம் செல்லாயிபுரத்தை சேர்ந்த ராமசெல்வம் மகள் சாருமதி (வயது12). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாருமதி இறந்து விட்டதாக அவரது பெற்றோர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர். நன்றாக இருந்த சிறுமி எப்படி இறந்தார்? என அவர்கள் கேட்டதற்கு சரிவர பதில் சொல்ல வில்லை.

    அதன்பிறகு சிறுமியின் உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் புதைத்து விட்டனர். இதனால் அருகில் வசிப்பவர்களுக்கு சிறுமியின் சாவில் சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடலை தோண்டி எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறினர்.

    இதனையடுத்து உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி முன்னிலையில் தேனி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடற்கூறு பாகங்கள் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் முடிவில் சிறுமி எவ்வாறு இறந்தார்? என தெரிய வரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் தோண்டி எடுத்து விசாரணை நடத்தப்படுவதாக வந்த தகவலால் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    பொன்னேரி அருகே பள்ளி செல்ல தாயுடன் நின்றபோது வேன் மோதி சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள ஆலாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு பிரியன், பிரியதர்ஷினி, பிரகதி என்கிற ஐஸ்வர்யா (வயது 4) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். 3 பேரும் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். பிரகதி யூ.கே.ஜி. படித்து வந்தார்.

    குழந்தைகள் 3 பேரையும் வழக்கமாக கல்பனா அரசு பஸ்சில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் குழந்தைகளுடன் பள்ளி செல்வதற்காக அதே பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

    அப்போது சோழவரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அந்த வேன் திடீரென பஸ்சுக்காக்கா காத்திருந்த கல்பனா மற்றும் அவர்கள் குழந்தைகள் மீது மோதியது. இதில் வேனின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பிரகதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கல்பனாவும், அவரது மற்ற 2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பிரகதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்பனா அலறி துடித்தது பரிதாபமாக இருந்தது. விபத்து பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    ஆத்திரம் அடைந்த அவர்கள் வேனின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். மேலும் வேன் டிரைவர் கோளூரை சேர்ந்த நந்தகுமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து ஏற்படுத்திய டிரைவரை கிராம மக்கள் பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    ×